இதய அறுவை சிகிச்சைக்காக பாகிஸ்தான் சிறுமிக்கு விசா வழங்கிய இந்திய அரசு


இதய அறுவை சிகிச்சைக்காக பாகிஸ்தான் சிறுமிக்கு விசா வழங்கிய இந்திய அரசு
x
தினத்தந்தி 27 Sep 2017 9:28 AM GMT (Updated: 2017-09-27T14:58:30+05:30)

பாகிஸ்தானில் இருந்து இதய அறுவை சிகிச்சைக்காக இந்தியா வர பாகிஸ்தான் சிறுமிக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கராச்சியில் தாய், தந்தையுடன் வசித்து வரும் 7 வயது சிறுமிக்கு இந்தியாவில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக கடந்த ஆகஸ்டில் இந்தியா வருவதற்கு விசா விண்ணப்பித்து இருந்தனர். விண்ணப்பித்த போதும்  விசா கிடைக்காததால், சிறுமியின் தயார் உடனடியாக இந்திய வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை டுவிட்டரில் தொடர்புகொண்டு உதவி கோரினார்.

இந்தநிலையில் சிறுமியின் உடல்நிலை கருத்தில் கொண்டு தயாருக்கும்,சிறுமிக்கும் விசா வழங்க உத்தரவிட்டார்.  

இது தொடர்பாக சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தான் சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக மருத்துவ விசா வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story