இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது என்பது உலகிற்கு தெரியும் - ராஜ்நாத் சிங் சொல்கிறார்


இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது என்பது உலகிற்கு தெரியும் - ராஜ்நாத் சிங் சொல்கிறார்
x
தினத்தந்தி 27 Sep 2017 11:44 AM GMT (Updated: 2017-09-27T17:14:42+05:30)

இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது என்பது உலகிற்கு தெரியும் என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறிஉள்ளார்.புதுடெல்லி,


பாரதீய ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா, தி இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதிஉள்ள கட்டுரையில் பிரதமர் மோடியும், அவரது நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் சேர்ந்து இந்தியப் பொருளாதாரத்தையே சிதைத்து விட்டார்கள் என விமர்சனம் செய்து உள்ளார். அவருடைய கட்டுரையை மேற்கோள்காட்டி பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக பொருளாதார விவகாரத்தில் காங்கிரஸ் கேள்வி கணைகளை வீசிவருகிறது.

 இந்நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது என்பது உலகிற்கு தெரியும் என ராஜ்நாத் சிங் கூறிஉள்ளார்.

பொருளாதாரம் தொடர்பான யஷ்வந்த் சின்ஹாவின் கருத்துக்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நாட்டில் உண்மைகளை யாராலும் மறக்க முடியாது என்றார். “உலகில் பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு என அனைத்து உலக நாடுகளும் ஒப்புக்கொண்டு உள்ளது. யாரும் இந்திய உண்மையை மறக்க கூடாது. உலக அரங்கில் பொருளாதார விவகாரத்தில் இந்தியாவின் நம்பகத்தன்மை நிறுவப்பட்டது,”என்றார் ராஜ்நாத் சிங்.


Next Story