நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்-ராகுல் காந்தி


நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்-ராகுல் காந்தி
x
தினத்தந்தி 27 Sep 2017 12:42 PM GMT (Updated: 2017-09-27T18:12:45+05:30)

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ராஜ்கோட்,

குஜராத் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு  குஜராத்தில் 3 நாள் பயணமாக ராகுல் காந்தி வந்துள்ளார். முதல் நாளில் மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி போன்றவற்றில் பிரதமர் நரேந்திர மோடியை ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

இரண்டாவது நாளான நேற்று மாநிலத்தில் படேல் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் ஜாம் நகரைச் சுற்றி உள்ள கிராம பகுதிகளில் ராகுல் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

இந்தநிலையில் 3-வது நாளான இன்று ராஜ்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

மோடி அரசு 15 தொழில் நிறுவனங்களுக்கு 1, 30, 000 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது. இதனை இங்கு இருக்கும் நிறுவனங்களுக்கு உதவி இருந்தால் அதிகமானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து இருக்கும்.  சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களுக்குள் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கு விவசாய கடன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.  காங்கிரஸ் கட்சி 3 கொள்கைகளை கொண்டுள்ளது.  சீனாவை எதிர்க்கும், சிறு வணிகர்களை ஊக்குவிக்கும், வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story