விரைவில் ஆன்லைன் மூலம் பெட்ரோல்-டீசல் விற்பனை பெட்ரோலியத்துறை மந்திரி தகவல்


விரைவில் ஆன்லைன் மூலம் பெட்ரோல்-டீசல் விற்பனை  பெட்ரோலியத்துறை மந்திரி தகவல்
x
தினத்தந்தி 27 Sep 2017 2:12 PM GMT (Updated: 2017-09-27T19:42:31+05:30)

விரைவில் ஆன்லைன் மூலம் பெட்ரோல்,டீசல் விலை விற்பனை செய்யப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

விரைவில் ஆன்லைன் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும். கடந்த ஏப்.22-ம் தேதி ஆன்லைன் பெட்ரோல் விற்பனை தொடர்பாக, விரைவில் அறிவிப்பு வெளியாகும். மேலும் ஜுன் 1 முதல் மை பெட்ரோல் பம்ப் என்ற ஆப் மூலம் ஆன்லைனில் வீடு தேடி பெட்ரோல் வழங்கும் நடைமுறை பெங்களுருவில் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீண்டும் இந்த அறிவிப்பினை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Next Story