இந்துக்களின் படுகொலை மியான்மர் மோதலில் நடந்த கொடூரங்களுக்கு சாட்சியம்!


இந்துக்களின் படுகொலை மியான்மர் மோதலில் நடந்த கொடூரங்களுக்கு சாட்சியம்!
x
தினத்தந்தி 27 Sep 2017 3:04 PM GMT (Updated: 27 Sep 2017 3:04 PM GMT)

மியான்மரில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டது மோதலில் நடந்த கொடூரங்களுக்கு சாட்சியாகி உள்ளது.


யங்கூன்,

மியான்மரில் பவுத்தர்களால் ஒரு மில்லியன் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் என்று பார்க்கப்படுகிறது.

 பல்வேறு தாக்குதலை எதிர்க்கொண்டு தலைமுறைகள் கணக்கில் வசித்துவரும் இவர்களுக்கு அரசு குடியுரிமை வழங்க மறுத்து வருகிறது. 

மியான்மரில் போலீஸ் படையினர் மீது கடந்த மாதம் 25-ந் தேதி ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் (அர்சா) தாக்குதல் நடத்தி, 12 பேரை கொன்றனர். அதைத் தொடர்ந்து, ராகினே மாகாணத்தில் இருந்து வந்த அந்த இன மக்கள் மீது ராணுவமும், புத்த மதத்தினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். உயிர் பிழைப்பதற்காக 4 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்காளதேசத்துக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். ரோஹிங்யா இஸ்லாமியர்கள் தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றனர். 

இந்நிலையில் மியான்மரின் ராகினே மாகாணத்தில் ஒரே இடத்தில் குவியலாக புதைக்கப்பட்ட இந்துக்களின் சடலங்கள் கொண்ட கல்லறை கண்டறியப்பட்டுள்ளதாக மியான்மர் அரசு கூறிஉள்ளது.

கல்லறையில் இருந்த 28 சடலங்களில் பெண்களின் சடலங்கள் அதிகமாக இருந்தன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சடலங்கள் அனைத்தும் இந்து சமூகத்தினருடையது. இவர்களை ரோஹிங்யா பயங்கரவாதிகள் கொன்று புதைத்திருக்கலாம் என்று மியான்மர் அரசு கூறுகிறது. மியான்மர் அதிகாரிகள் இந்து கிராமவாசிகளின் சடலங்களை காட்டிஉள்ளனர், அவர்கள் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டு உள்ளனர் என அவர்கள் தெரிவித்து உள்ளது. இந்த வாரம் மட்டும் 48 இந்துக்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. ராகினேவில் புத்த மதத்தினருக்கும், ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கும் இடையே நேரிட்டு உள்ள மோதலில் இந்துக்கள் உயிரிழப்பு அங்கு நேரிட்ட கொடூரங்களுக்கு சாட்சியமாக அமைந்து உள்ளது.

இந்துக்களின் சடலங்களை காண்பிக்க செய்தியாளர்களை யங்கூனில் இருந்து பாதுகாப்பு படை அழைத்து சென்று உள்ளது. இந்துக்களும் வங்காளதேசத்தில் அடைக்கலம் கோரி அகதிகளாக வருகின்றனர். அவர்களில் சிலர் தாங்கள் இங்கு வருவதற்கு இஸ்லாமியர்களே உதவுகின்றனர் என கூறும் நிலையும் காணப்படுகிறது.

எங்களுக்கு கிடைத்த தகவல்களை கொண்டு நாங்கள் ஆய்வை மேற்கொண்டோம். மாறப்பட்ட நிலத்தினை அடையாளம் கண்டோம், நாங்கள் அங்கு தோண்டுவதற்கு முயற்சி செய்தோம், துர்நாற்றம் வெளியேறியது என போலீஸ் அதிகாரி அக்கார் கோ கூறிஉள்ளார். 

ஆகஸ்ட் 25-ம் தேதி பாதுகாப்பு படையின் முகாம்களை குறிவைத்து தாக்குதலை நடத்தியதை அடுத்து ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் (அர்சா) யி பாவ் கியா என்ற இந்துக்கள் அதிகமாக வாழும் கிராமத்திற்கு சென்று உள்ளனர், அவர்களை கத்தியால் தாக்கு படுகொலையை செய்து உள்ளனர் என மியான்மர் அரசு கூறுகிறது. நாங்கள் பயங்கரவாதிகளை குறிவைத்துதான் தாக்குதல் நடத்துகிறோம் என மியான்மர் அரசு கூறுகிறது. ஆனால் அர்சா நாங்கள் இந்துக்களை நாங்கள் கொல்லவில்லை என மறுப்பு தெரிவித்து உள்ளது, பொதுமக்களை நாங்கள் தாக்கவில்லை என கூறிஉள்ளது.

இந்த கொடூரமான மோதல்களில் மிகவும் சிறியளவில் வசிக்கும் இந்துக்கள் சிக்கியது எப்படி என்பது தெளிவாகவில்லை, இவ்விவகாரம் தொடர்பாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவல்களை தெரிவிக்கிறார்கள். இந்துக்கள் மியான்மர் அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் எனவும் அரசிற்கு உளவு பார்க்கிறார்கள் எனவும் கிளர்ச்சியாளர்கள் சந்தேகம் கொள்கிறார்கள் என சில கிராம வாசிகள் கூறுகிறார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் வங்காளதேசத்தில் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த இந்து பெண், தன்னுடைய உறவினரை மியான்மர் புத்த மதத்தினர் கொன்றனர் என்றார். 

புத்த மதத்தினர் உங்களையும் கொன்றுவிடலாம், என இந்துக்களை, இஸ்லாமியர்கள் வங்கதேசம் அழைத்து வந்து உள்ளனர் எனவும் கிராம வாசிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

ரோஹிங்யாக்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களும் எழுந்து உள்ளது என ராய்டர்ஸ் விரிவாக செய்தியில் குறிப்பிட்டு உள்ளது. 

படுகொலை செய்யப்பட்ட இந்துக்களின் சடலங்களை பரிசோதனை செய்த டாக்டர் மாங் மாங் தையன், “இந்த படுகொலை அர்சா கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்டது என்றே ஆதாரங்கள் காட்டுகிறது,” என கூறிஉள்ளார். படுகொலை செய்யப்பட்டவர்களின் கண்கள், கைகள் கட்டுப்பட்டு கழுத்தை அறுத்து குழிக்குள் தள்ளப்பட்டு உள்ளனர் என மியான்மர் அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


Next Story