தேசிய செய்திகள்

சபரிமலையில் பெண்கள் தரிசனம்: உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு + "||" + Supreme Court order on entry of women in Sabarimala temple likely today

சபரிமலையில் பெண்கள் தரிசனம்: உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு

சபரிமலையில் பெண்கள் தரிசனம்: உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு
சபரிமலை கோவிலில் பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொது நல மனுவில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய முடிவை அறிவிக்கிறது.
புதுடெல்லி,

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்தும், அனைத்து பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க உத்தரவிடக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.  

சபரிமலை கோவிலை நிர்வாகம் செய்யும் திருவாங்கூர் தேவசம் போர்டு மற்றும் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலரான பந்தளம் மகாராஜா ஆகியோர் தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பான தங்கள் முடிவை கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

 இந்நிலையில், இந்நிலையில், 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பதா, வேண்டாமா என்ற வழக்கை சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதா, வேண்டாமா என்ற முக்கிய முடிவை இன்று சுப்ரீம் கோர்ட் வெளியிட உள்ளது.