ஜம்மு காஷ்மீர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்


ஜம்மு காஷ்மீர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்
x
தினத்தந்தி 13 Oct 2017 5:38 AM GMT (Updated: 13 Oct 2017 5:38 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஜம்மு,

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் அத்துமீறி செயல்படுவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய செயல்பாடு அதிகரித்துள்ளது. நேற்று எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திய  நிலையில், இன்றும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

 ஜம்மு காஷ்மீரின் கிருஷ்ணகாதி செக்டாரில் உள்ள நிலைகளை குறிவைத்து  காலை 7.45 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்கள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. 

முன்னதாக நேற்று பாகிஸ்தான் ராணுவம் நடத்தியிருந்த தாக்குதலில் ராணுவ வீரர் உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் காயம் அடைந்தனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிகழாண்டு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி செயல்பட்டு வருகிறது. இந்திய பிராந்திய பகுதிகளில் நடப்பாண்டு 600 க்கும் மேற்பட்ட முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. 

Next Story