இந்தியாவில் பட்டினி அதிகரிப்பு: பட்டியலில் 100-வது இடத்துக்கு பின் தங்கியது


இந்தியாவில் பட்டினி அதிகரிப்பு: பட்டியலில் 100-வது இடத்துக்கு பின் தங்கியது
x
தினத்தந்தி 13 Oct 2017 5:58 AM GMT (Updated: 13 Oct 2017 5:58 AM GMT)

உலக அளவில் வளரும் நாடுகளின் பட்டினி அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

உலக அளவில் வளரும் நாடுகளின்  பட்டினி அதிகம் இருக்கும்  நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் உள்ள 119 நாடுகளில் இந்தியா 100 வது இடம் பெற்றும் பின்னடவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இந்தியா 97-வது இடம் வகித்தது. வடகொரியா, வங்காளதேசம், ஈராக் ஆகிய நாடுகள் இந்தியாவை விட இந்த பட்டியலில் முன்னிலையில் உள்ளது. பாகிஸ்தான் இந்தியாவையும் விட பின் தங்கியுள்ளது. 

சர்வதேச உணவு கொள்கை ஆய்வு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் பசி, பட்டினி பிரச்னையால் அதிக அளவிலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினியில் அதிகம் வாடுவோர் உள்ள ஆசிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தானும், 2வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன.

உலக பட்டினி நாடுகள் பட்டியலில் இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா(29), நேபாளம் (72), மியான்மர் (77), இலங்கை (84), வங்கதேசம் (88), பாகிஸ்தான் (106) ஆப்கானிஸ்தான் (107), வடகொரியா (93), ஈராக் (78) ஆகிய இடங்களில் உள்ளன. 

Next Story