பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தது மத்திய பிரதேச அரசு


பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தது மத்திய பிரதேச  அரசு
x
தினத்தந்தி 13 Oct 2017 6:34 AM GMT (Updated: 13 Oct 2017 6:34 AM GMT)

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மத்திய பிரதேச மாநில அரசு குறைத்துள்ளது.

ஜபால்பூர்,

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்திருப்பதை கவனத்தில் கொண்டு, அதன் விலையை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, பெட்ரோலியப் பொருட்கள் மீதான வாட் வரியில் ரூ.2-ஐ மத்திய அரசு அண்மையில் குறைத்தது. இதையடுத்து, மாநில அரசுகளுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடிதம் எழுதினார். 

அந்தக் கடிதத்தில், மத்திய அரசை பின்பற்றி, மாநில அரசுகளும், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து, பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களான குஜராத், மராட்டிய அரசுகள் வாட் வரியை குறைத்தன. இதைத்தொடர்ந்து தற்போது மத்திய பிரதேச மாநிலமும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளது. டீசல் மீதான வாட் வரி 5 சதவீதமும் பெட்ரோல் மீதான வாட் வரி 3 சதவீதமும் குறைக்கப்படுவதாக மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.


Next Story