மந்திரி கே.ஜே.ஜார்ஜ் ராஜினாமா செய்யமாட்டார் கர்நாடக முதல்-மந்திரி அறிவிப்பு


மந்திரி கே.ஜே.ஜார்ஜ் ராஜினாமா செய்யமாட்டார் கர்நாடக முதல்-மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Oct 2017 10:45 PM GMT (Updated: 27 Oct 2017 9:10 PM GMT)

மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து இருப்பதால் அவர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கர்நாடக முதல்-மந்திரி கூறினார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கணபதி என்ற போலீஸ் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக அந்த மாநில மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மற்றும் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதனால் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து மூத்த மந்திரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து இருப்பதால் அவர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும், விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பார் என்றும் கூறினார்.

பாரதீய ஜனதா, தனது அரசியல் ஆதாயத்துக்காக சி.பி.ஐ.யை பயன்படுத்துவதாகவும் அப்போது அவர் குற்றம் சாட்டினார். 

Next Story