அம்பலப்புழே உன்னிக் கண்ணணோடு... மலையாள பாடலை பாடியது டோனி மகள் தானா?


அம்பலப்புழே உன்னிக் கண்ணணோடு... மலையாள பாடலை பாடியது டோனி மகள் தானா?
x
தினத்தந்தி 28 Oct 2017 5:41 AM GMT (Updated: 2017-10-28T11:11:35+05:30)

அம்பலப்புழே உன்னிக் கண்ணணோடு நீ.. என்ற மலையாளபாடலை பாடிய டோனியின் மகளுக்கு கேரளாவில் கவுரவம் அளிக்கபடுகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனியின் மகள் ஷிவா சமீபத்தில் பாடிய மலையாளப் பாடல் வைரலானது. மோகன்லால்  நடித்த அத்வைதம் படத்தில் இடம் பெற்ற ‘அம்பலப்புழே உன்னிக் கண்ணணோடு நீ’ என்னும் பாடலை ஷிவா பாடினார்.

இதனை தொடர்ந்து அம்பலப்புழா கிருஷ்ணன் கோவில் நிர்வாகத்தினர் ஷிவாவை சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து நிர்வாக ஆலோசனைக்குழு தலைவர் கூறுகையில், கேரளக் குழந்தையைப் போல மலையாளப் பாடலை ஷிவா சிறப்பாக பாடியது எங்களைக் கவர்ந்தது. எனவே வரும் ஜனவரி 14ம் தேதி நடைபெறவிருக்கும் பந்த்ரண்டு கலாபம் விழாவுக்கு டோனியின் மகளை அழைக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

ஆனால் டோனி மகள் இந்த பாடலை பாட சாத்திய மில்லை என கேரளாவில் ஒரு பிரிவினர் கூறி வருகின்றனர். ஆனால் டோனியில் நெருங்கிய குடும்பத்தினர்  அதைபாடியது  குழந்தை ஷிவாதான் என கூறி உள்ளனர். 

பெரும்பாலும் 'நா' மற்றும் 'நாகா' கொண்ட பிற மொழிகளில் இல்லாத மிகப்பெரிய நாக்கு பிறழும்  சொல் மலையாளத்தில் உள்ளது. எனவே சிறு குழந்தை அதைபாடி இருக்கமுடியாது என கூறப்பட்டது.

ஆனால் தற்போது  ஒரு உண்மை தெரியவந்து உள்ளது. குழந்தை ஷிவாவுக்கு ஆயாவாக ஒரு மலையாளி பெண் இருப்பது தெரியவந்து உள்ளது. அவர் குழந்தைக்கு பயிற்சி அளித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனினும், குடும்பத்தினர் அந்த  'சேச்சி'யின்  விவரங்களை வெளிப்படுத்த மறுத்துவிட்டனர்.

Next Story