பா.சிதம்பரத்தின் கருத்து இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது-ஸ்மிருதி இரானி


பா.சிதம்பரத்தின் கருத்து இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது-ஸ்மிருதி இரானி
x
தினத்தந்தி 28 Oct 2017 4:12 PM GMT (Updated: 28 Oct 2017 4:12 PM GMT)

முன்னாள் மத்திய மந்திரி பா.சிதம்பரத்தின் கருந்து இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது என மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரி பா.சிதம்பரம் குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் ஜம்மு காஷ்மீர் மக்கள் தன்னாட்சி அதிகாரம் கேட்பது நியாயமானது தான் எனவும், அது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யலாம் என கூறியிருந்தார்.

அவரது கருத்திற்கு பதில் அளித்த ஸ்மிருதி இரானி கூறுகையில்,

சிதம்பரம் கூறிய கருத்து இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. வல்லபாய் படேல் இந்தியா முழுவதும் ஒரு அரசியல் அமைப்பின் கீழ் கொண்டு வர அவர் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார்.  சிதம்பரம் இந்தியாவின் யூனியனை உடைப்பதை பற்றி அவர் பேசி இருக்கிறார். அவரது இந்த பேச்சு அதிர்ச்சி அடைய வைக்கிறது. அவரது பேச்சு காங்கிரசின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிசெய்து பேரழிவை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story