காங்கிரசை ஆதரிக்க ஹர்திக் பட்டேல் திடீர் நிபந்தனை


காங்கிரசை ஆதரிக்க ஹர்திக் பட்டேல் திடீர் நிபந்தனை
x
தினத்தந்தி 28 Oct 2017 10:45 PM GMT (Updated: 2017-10-29T02:46:37+05:30)

காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஹர்திக் பட்டேல் நேற்று திடீர் நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார்.

ஆமதாபாத், 

குஜராத் மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இட ஒதுக்கீடு கோரி பதிதார் அனாமத் அந்தோலன் சமிதி என்ற அமைப்பு அதன் தலைவர் ஹர்திக் பட்டேல் தலைமையில் போராடி வருகிறது. இதில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கவும் தயார் என்று ஹர்திக் பட்டேல் அறிவித்து இருந்தார். ஆனால் இதுபற்றி காங்கிரஸ் தரப்பில் எந்த உறுதியான பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஹர்திக் பட்டேல் நேற்று திடீர் நிபந்தனை ஒன்றை விதித்தார்.

இதுபற்றி அவர் ஆமதாபாத் நகரில் நிருபர்களிடம் கூறும்போது, “இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பிரச்சினையில் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை வருகிற 3-ந்தேதிக்குள் அறிவிக்கவேண்டும். இல்லையென்றால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சூரத் நகரில் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுபோல் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி 3-ந்தேதி சூரத் நகருக்கு வரும்போது அவருக்கு எதிராக எங்களது அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள்” என்றார். 

Next Story