அடுத்த 5 ஆண்டுகளில் ரெயில்வேயில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் ரெயில்வே மந்திரி பேச்சு


அடுத்த 5 ஆண்டுகளில் ரெயில்வேயில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் ரெயில்வே மந்திரி  பேச்சு
x
தினத்தந்தி 29 Oct 2017 10:30 PM GMT (Updated: 29 Oct 2017 7:41 PM GMT)

ரெயில்வேயில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார். பியூஷ் கோயல் மும்பையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சி ஒன்றில் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர்

மும்பை,

ரெயில்வேயில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.

பியூஷ் கோயல்

மும்பையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சி ஒன்றில் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தேசிய போக்குவரத்துக்கு புதிய பாதை அமைக்க நான் முயற்சி எடுத்து வருகிறேன். அடுத்த 5 ஆண்டுகளில், ரெயில்வே துறையில் மட்டும் ரூ.9 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். இதனை வேலைவாய்ப்பாக மாற்றும் போது, முதலீட்டின் மூலம் மட்டுமே 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

எரிபொருள் கட்டணம் குறையும்

அரசின் நோக்கமான பாதுகாப்புடன் கூடிய சவுகரியமான பயண வசதிகளை அளிப்பதில், ரெயில்வே தீவிரமாக செயல்பட்டு, முக்கிய பங்கு ஆற்றுகிறது. ரெயில் வழித்தடங்களை மின்மயமாக்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட 10 ஆண்டு இலக்கை, 4 ஆண்டாக குறைக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் மூலம் 30 சதவீதம் வரை செலவு குறைவதுடன், ஆண்டுக்கு எரிபொருள் கட்டணம் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடி மிச்சமாகும்.

இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.


Next Story