கேரளாவில் இரும்பு நடைபாலம் சரிந்து 3 பெண்கள் சாவு; 50 பேர் காயம்


கேரளாவில் இரும்பு நடைபாலம் சரிந்து 3 பெண்கள் சாவு; 50 பேர் காயம்
x
தினத்தந்தி 30 Oct 2017 10:34 PM GMT (Updated: 2017-10-31T04:04:28+05:30)

கேரள மாநிலம் கொல்லம் அருகே சாவரா என்ற இடத்தில் கேரள கனிம மற்றும் உலோக ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஏராளமானவர்கள் வேலை பார்த்து வருகிறார்.

கொல்லம்,

கேரள மாநிலம் கொல்லம் அருகே சாவரா என்ற இடத்தில் கேரள கனிம மற்றும் உலோக ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஏராளமானவர்கள் வேலை பார்த்து வருகிறார். இந்த ஆலைக்கு செல்வதற்காக இரும்பு நடைபாதை மேம்பாலம் ஒன்றை அந்த நிறுவனம் அமைத்து உள்ளது.

14 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்திற்குள் நேற்று காலை 11 மணி அளவில் ஒரே நேரத்தில் 70–க்குமேற்பட்டவர்கள் சென்றனர். அப்போது பாரம் தாங்காமல் இரும்பு மேம்பாலம் சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி ஷியமலாதேவி(வயது56), அஞ்சலினா(49), அன்னமா(47) ஆகிய 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் உள்ளூர் மக்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று இடிபாடுளில் சிக்கியவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் பாலத்தில் இருந்த 50 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பல பெண்கள் பலத்த காயத்துடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Next Story