புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Oct 2017 1:48 AM GMT (Updated: 2017-10-31T07:18:03+05:30)

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழையினால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கனமழையினால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story