கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் தலைமை காவல்துறை அதிகாரியாக நீலாமணி என்.ராஜூ நியமனம்


கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் தலைமை காவல்துறை அதிகாரியாக  நீலாமணி என்.ராஜூ நியமனம்
x
தினத்தந்தி 31 Oct 2017 11:36 AM GMT (Updated: 2017-10-31T17:06:11+05:30)

கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் தலைமை காவல்துறை அதிகாரியாக நீலாமணி என்.ராஜூ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூர்,

ரூபக் குமார் தத்தா இன்றுடன் ஓய்வுபெறுவதையொட்டி புதிய  (இயக்குனர் ஜெனரல் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல்) (DG&IGP)ஆக நீலாமணி என்.ராஜூ நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 1983-ம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார்.  நீலாமணி நியமனம் அம்மாநில முதல்-மந்திரி சித்ராமையாவால் எடுக்கப்பட்டதாக உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீலாமணி என்.ராஜூ சொந்த ஊர் ஜார்கண்ட் மாநிலம் ரூர்கிவை சேர்ந்தவர் ஆவார். கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் தலைமை காவல்துறை அதிகாரியாக  நீலாமணி என்.ராஜூ நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story