இந்திய கடற்படைக்கு 111 ஹெலிகாப்டர்கள், ரூ. 21,738 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்


இந்திய கடற்படைக்கு 111 ஹெலிகாப்டர்கள், ரூ. 21,738 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
x
தினத்தந்தி 31 Oct 2017 3:02 PM GMT (Updated: 2017-10-31T20:32:21+05:30)

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ரூ. 21,738 கோடி மதிப்பில் இந்திய கடற்படைக்கு 111 ஹெலிகாப்டர்களை பெறும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

புதுடெல்லி,

முக்கிய நகர்வாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று இந்திய கடற்படைக்கு ரூ. 21,738 கோடி மதிப்பில் ஹெலிகாப்டர்களை வாங்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது என அரசு தரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது தொடர்பான கவுன்சில் கூட்டம் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக 16 ஹெலிகாப்டர்கள் உடனடியாக பயன்படுத்தும் நிலையில் வாங்கப்படும் எனவும், மீதம் 95 ஹெலிகாப்டர்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவித்து உள்ளன. 


Next Story