தேசிய செய்திகள்

ஐதராபாத்தில் மைனர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 85 வயது முதியவர் கைது + "||" + Hyd police arrest 85-yr-old man for raping and assaulting 6 minor girls

ஐதராபாத்தில் மைனர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 85 வயது முதியவர் கைது

ஐதராபாத்தில் மைனர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 85 வயது முதியவர் கைது
மைனர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய 85 வயது முதியவரை போலீஸ் கைது செய்தது.
ஐதராபாத்,

முதியவர் சிறுமிகளுக்கு இனிப்புக்கள் கொடுத்து ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டி உள்ளார் என ஐதராபாத் போலீஸ் தெரிவித்து உள்ளது.

குஷாய்குடாவை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி தன்னிடம் முதியவர் சத்யநாராயண ராவ் தவறாக நடந்துக் கொண்டது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்து உள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் முதியவரை கைது செய்து உள்ளது. முதியவர் சத்யநாராயண ராவ் ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று கடந்த மாதங்களிலும் முதியவர் சிறுமிகளிடம் தவறாக நடந்துக் கொண்டு உள்ளார். மேலும் 5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார், மிரட்டி உள்ளார் என தெரியவந்து உள்ளது.

சிறுமிகளுக்கு சாக்லேட் மற்றும் இனிப்புகளை வழங்கி, தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்து உள்ளார் என தெரியவந்து உள்ளது. 

சிறுமிகள் அனைவரும் 12 வயதுடையவர்கள் எனவும் தெரியவந்து உள்ளது. முதியவரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னதாக மறைந்து விட்டார் என தெரியவந்து உள்ளது. ஐதராபாத் போலீஸ் தரப்பில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பாலியல் தொல்லை தொடர்பான புகார்களை எப்படி போலீசிடம் தெரிவிப்பது எப்படி தற்பாதுகாத்துக் கொள்ளவது என பிரசாரம், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போலீஸ் அதிகாரிகள் இடம்பெற்று உள்ள இந்த குழுவின் விசாரணையில் மேலும் சிறுமிகள் முதியவரால் பாதிக்கப்பட்டது தெரியவந்து உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.