இந்திரா காந்தி மோர்பி தொகுதிக்கு வரும் போது மூக்கை கர்ச்சிப்பால் பொத்தி கொண்டார் பிரதமர் மோடி தாக்கு


இந்திரா காந்தி  மோர்பி தொகுதிக்கு வரும் போது மூக்கை  கர்ச்சிப்பால் பொத்தி கொண்டார் பிரதமர் மோடி தாக்கு
x
தினத்தந்தி 29 Nov 2017 8:19 AM GMT (Updated: 29 Nov 2017 8:24 AM GMT)

இந்திரா காந்தி மோர்பி தொகுதிக்கு வரும் போது கர்சிப்பை எடுத்து மூக்கை பொத்திக்கொண்டார் என பிரதமர் மோடி கூறினார்.

அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் வருகிற 9-ந்தேதியும், 14-ந் தேதியும் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில், சவுராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தில் உள்ள 89 தொகுதிகளிலும் 9-ந் தேதி வாக்கு பதிவு நடக்கிறது.

முதல் கட்ட வாக்கு பதிவு நடைபெறும் இந்த பகுதிகளில் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில்  மோர்பி தொகுதியில்   நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

சகோதரி இந்திரா காந்தி   மோர்பி  தொகுதிக்கு வந்தபோது தான் வைத்து இருந்து கர்சிப்பை எடுத்து மூக்கை பொத்திக்கொண்டார். அந்த புகைப்படம் நான் ​​சித்ரலேகா இதழில் பார்த்தேன்.  மோர்பி தொகுதி  ஒரு பாரம்பரிய பா.ஜ.க கோட்டை.  மோர்பி வீதிகள் மணம் கொண்டவை. நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் அதன் தாக்கங்களை மட்டுமே சிந்திக்க முடியும். 

காங்கிரஸ் வளர்ச்சிக்கு கை பம்புகளை கொடுத்தது.  சமுனி யோஜனா திட்டத்தின் மூலம் நர்மதாவில் இருந்து பெரிய குழாய்கள் கொண்டு வந்துள்ளது.  குஜராத்தில் நாம் ஒவ்வொரு துளி தண்ணீரையும் காப்பாற்றுவதற்காக ஒரு வெகுஜன இயக்கத்தை ஆரம்பித்தோம். ஏன் என்றால் நீர் இல்லாமைக்கு பாதகமான பாதிப்பை நாம் புரிந்துகொண்டுள்ளோம்.

எங்களுக்கு தேர்தலில் வெற்றி பெற்று பெருவாரியான வாக்குகள் பெறுவது அல்ல. ஒவ்வொரு குடிமகனுக்கும் சேவை செய்வது ஆகும். 

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Next Story