நாளை இந்தியா வரும் ஒபாமா பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்


நாளை இந்தியா வரும் ஒபாமா பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்
x
தினத்தந்தி 29 Nov 2017 9:28 AM GMT (Updated: 2017-11-29T14:58:12+05:30)

நாளை இந்தியா வரும் ஒபாமா பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

புதுடெல்லி,

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்தியா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நாளை இந்தியா வரும் ஒபாமா நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

ஒபாமா பவுண்டேஷன் ஏற்பாடு செய்துள்ள டவுன் ஹால் கூட்டத்தில் பங்கேற்கிறார். நாடு முழுவதிலும் இருந்து வரும் மாணவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.

கடந்த 2014  முதல் 2016 வரை பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் 8 முறை சந்தித்து பேசி உள்ளனர்.  ஒபாமா பதவிக்காலம் முடிந்த பின் பிரதமர் மோடியுடன் ஒபாமா சந்தித்து பேசுவது இதுவே முதல் முறை ஆகும். 

ஒபாமா இந்தியாவிற்கு கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு குடியரசு தினவிழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story