காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி


காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 30 Nov 2017 1:31 AM GMT (Updated: 2017-11-30T07:00:54+05:30)

காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி, 

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான ஏ.கே.அந்தோணி, நேற்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் தவறி கீழே விழுந்தார். அதையடுத்து, அவர் டெல்லி ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது மூளையில் லேசாக ரத்தக்கசிவு ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். அதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மூத்த டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

Next Story