ஜம்மு காஷ்மீர்: புட்காம் பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீர்: புட்காம் பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 30 Nov 2017 8:15 AM GMT (Updated: 2017-11-30T13:44:52+05:30)

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் எல்லைப்பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதால்  அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள்  ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சண்டையில் ராணுவம், எல்லைப்பாதுகாப்பு படை மற்றும்  புட்காம்  போலீசார் ஈடுபட்டுள்னர்.

Next Story