குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்


குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
x
தினத்தந்தி 30 Nov 2017 9:06 AM GMT (Updated: 2017-11-30T14:36:07+05:30)

குரங்குகள் ஒன்றரை வயது குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் குரங்குகளுக்கு நண்பனாகவும், தேவைப்படும் பொழுது குரங்குகளுக்கு உணவுகளை வழங்கும் குழந்தையாக ஒன்றரை வயது சிறுவன் ஒருவன் உள்ளான். இது குறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், தினந்தோறும் காலை 6 மணிக்கு குரங்குகள் தான் அவனை வந்து எழுப்பி விடும். அதன் பின், குரங்குகளுடன் விளையாடுவதும், அதுகளுக்கு நண்பனாக திகழ்வதும், உணவுகள் வழங்குவதும் தான் நடந்து வருகிறது. தற்போது வரை, குரங்குகளை அவனும் அடித்ததும் இல்லை, அதே போன்று குரங்குகளும், எங்களுடைய மகனை அடித்ததும் இல்லை என்று கூறியுள்ளனர்.

Next Story