குஜராத் தேர்தலில் பா.ஜனதா வியூகம், கடைசி நேரத்தில் படேல் சமூகத்தை சேர்ந்தவரை முதல்வராக அறிவிக்கலாம்


குஜராத் தேர்தலில் பா.ஜனதா வியூகம், கடைசி நேரத்தில் படேல் சமூகத்தை சேர்ந்தவரை முதல்வராக அறிவிக்கலாம்
x
தினத்தந்தி 30 Nov 2017 4:13 PM GMT (Updated: 30 Nov 2017 4:12 PM GMT)

குஜராத் தேர்தலில் கடைசி நேரத்தில் படேல் சமூகத்தை சேர்ந்தவரை பாரதீய ஜனதா முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


ஆமதாபாத்,

குஜராத்தில் மாநிலத்தில் பாரதீய ஜனதாவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் பட்டேல் இடஒதுக்கீடு போராட்டக்குழு தலைவர் ஹர்த்திக் பட்டேல் கைகோர்த்து உள்ளார். மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாரதீய  ஜனதா தீவிர பிரசாரம் செய்து வருகிறது. இப்போது படேல் சமூகத்தினரை தன்வசம் இழுக்கும் வகையில் அந்த சமூகத்தை சேர்ந்த ஒருவரை தேர்தலுக்கு முன்னதாக முதல்வர் வேட்பாளராக பாரதீய ஜனதா அறிவிக்கலாம் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டு உள்ளது. 

 படேல் சமூதாயத்திற்கு வலுவான செய்தியை அனுப்பும் வகையில் பாரதீய ஜனதா நடவடிக்கையில் ஈடுபடலாம் என செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலத்தை போன்று பாரதீய ஜனதா குஜராத் மாநிலத்திலும் முதல்-மந்திரி வேட்பாளரை அறிவிக்கலாம், அது படேல் சமூதாயத்தை சேர்ந்தவருக்காக இருக்கலாம் என தகவல்கள் தெரிவித்து உள்ளது என செய்தி வெளியாகி உள்ளது.

படேல் வாக்காளர்களை கவரும் வகையில் குஜராத் மாநில துணை முதல்வர் நிதின் படேல் ஒரு சிறந்த முதல்வர் வேட்பாளராக கருதப்படுகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் முதல்கட்ட தேர்தல் டிசம்பர் மாதம் 9-ம் தேதி நடைபெற உள்ளது, பிரசாரம் 7-ம் தேதியுடன் முடிகிறது. இதுவரையில் படேல் சமூதாயத்தினர் அதிகமாக வாழும் பகுதியில் நடந்த பாரதீய ஜனதா கூட்டத்தில் மக்கள் தரப்பில் சொல்லும்படியாக பதில்கிடையாது.


Next Story