மீண்டும் ஒரு எழுச்சி மூலம் இன்னொரு கெஜ்ரிவால் உருவாக மாட்டார் என நம்புகிறேன்-அன்னா ஹசாரே


மீண்டும் ஒரு எழுச்சி மூலம் இன்னொரு கெஜ்ரிவால் உருவாக மாட்டார் என நம்புகிறேன்-அன்னா ஹசாரே
x
தினத்தந்தி 13 Dec 2017 5:38 AM GMT (Updated: 13 Dec 2017 5:38 AM GMT)

மீண்டும் ஒரு எழுச்சி மூலம் இன்னொரு கெஜ்ரிவால் உருவாக மாட்டார் என நம்புகிறேன் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

ஆக்ரா,

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடந்த 2011-ம் ஆண்டு டெல்லியில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். பின்னர் அன்னா ஹசாரே இயகத்தில் இருந்து விலகி ஆம் ஆத்மி என்ற கட்சியை தொடங்கி டெல்லி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

இந்நிலையில் ஆக்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அன்னா ஹசாரே பேசியதாவது:

வரும் மார்ச் மாதம் 23-ம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக பெரிய போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தில் விவசாயிகள் பெரிய அளவில் கலந்துகொள்ள வேண்டும். ஜன் லோக்பால் மசோதாவை முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வர மறுத்து விட்டது.

அதனை தொடர்ந்து வந்த பிஜேபி மோடி அரசு  ஜன்லோக்பால் மசோதாவை நீர்த்து போய்விட்டது. காங்கிரஸும், பிஜேபியும் இரு குற்றவாளிகள். மோடி, ராகுல் இல்லாத ஒரு அரசு வேண்டும். 

முதலாளித்துவத்தின் ஒரு அரசாங்கத்தை நாங்கள் விரும்பவில்லை. விவசாயிகளின் நலனுக்காக செயல்படும் ஒரு அரசாங்கத்தை நாங்கள் விரும்புகிறோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story