தேசிய செய்திகள்

ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் மாநிலங்களவையில் அ.தி.மு.க கோரிக்கை + "||" + Stumble on the storm To declare national disaster In the Rajya Sabha Demand for AIADMK

ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் மாநிலங்களவையில் அ.தி.மு.க கோரிக்கை

ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்  மாநிலங்களவையில் அ.தி.மு.க கோரிக்கை
மாநிலங்களவையில் பேசிய அ.தி.மு.க எம்பி நவநீத கிருஷ்ணன் ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கூறினார்.

புதுடெல்லி

குமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி வீசிய ஒகி புயல் பேரிழப்பை ஏற்படுத்தியது.- மழை பெய்தபோது வீடு இடிந்தும், மரம் முறிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்ததிலும் மாவட்டம் முழுவதும் 11 பேர் பலியானார்கள்.

கடற்கரை கிராமங்களை கலங்க வைத்த ஒகி புயல் விவசாய நிலங்களையும் விட்டு வைக்கவில்லை. சூறாவளியாய் சுழன்றடித்த காற்று தென்னை, ரப்பர், தேக்கு, வாழை மரங்களை வேரோடும், வேரடி மண்ணோடு சாய்த்தது. வரப்புக்கு மேல் வளர்ந்து நின்ற நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகின.

ஒகி புயலில் பலியான விவசாயிகள் மற்றும் பொது மக்களின் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறி விக்க வேண்டும், நாசமான பயிர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகளும், பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. மாநிலங்களவையில் பேசிய  அ.தி.மு.க எம்பி  நவநீத கிருஷ்ணன் ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

மாநிலங்கலவையில்  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து, பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிர்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியது.