பாஜக மதிக்கவில்லை என்றால் கட்சியைவிட்டு வெளியே வர வேண்டும் நிதின் பட்டேலுக்கு ஹார்திக் படேல் அறிவுரை


பாஜக மதிக்கவில்லை என்றால் கட்சியைவிட்டு வெளியே வர வேண்டும் நிதின் பட்டேலுக்கு ஹார்திக் படேல் அறிவுரை
x
தினத்தந்தி 30 Dec 2017 8:00 AM GMT (Updated: 30 Dec 2017 8:00 AM GMT)

பாஜக மதிக்கவில்லை என்றால் கட்சியை வெளியே வர வேண்டும் என்று நிதின் பட்டேலுக்கு ஹார்திக் படேல் அறிவுரை கூறியுள்ளார். #HardikPatel #NitinPatel

மும்பை,

குஜராத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா கட்சி மாநிலத்தில் ஆட்சியை மீண்டும் தக்க வைத்தது. இதைத்தொடர்ந்து புதிய முதல்–மந்திரியை தேர்வு செய்வதற்காக கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் கடந்த 22–ந்தேதி நடந்தது. இதில் முதல்–மந்திரியாக விஜய் ரூபானியும், துணை முதல்–மந்திரியாக நிதின் பட்டேலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பின்னர்  மாநில கவர்னர் ஓ.பி.கோலியை சந்தித்த பா.ஜனதா தலைவர்கள், மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினர். அதை ஏற்று, புதிய அரசை அமைக்குமாறு கவர்னரும் அழைப்பு விடுத்தார். அதன்படி குஜராத்தில் புதிய அரசு பதவி ஏற்றது.

இந்நிலையில் கடந்த ஆட்சியில் தன்னிடம் இருந்த நிதித்துறை தற்போது பறிக்கப்பட்டதால் துணை முதல்-மந்திரி பதவியை  நிதின் பட்டேல் ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நிதித்துறை பறிக்கப்பட்டதை நிதின் பட்டேல் அவமானமாக கருதுவதாகவும்,  நேற்று நடைபெற்ற அமைச்சரவை பொறுப்பேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அரசு வாகனம் மற்றும் பாதுகாவலர்களையும்  நிதின் பட்டேல்  ஏற்க மறுத்துவிட்டார். 

 சரங்பூரில் இது குறித்து படேல் இன தலைவர் ஹார்திக் படேல் செய்தியார்களிடம் கூறுகையில்,

பாஜக மதிக்கவில்லை என்றால் துணை முதல்-மந்திரி நிதின் பட்டேல்  கட்சியை விட்டு வெளியே வர வேண்டும்.  நிதின் பட்டேலுடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 10 பேர் வெளியே வர தயாராக உள்ளனர். பின்னர் அவர் நல்ல நிலைப்பட்டை பெற காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story