பிச்சைக்காரர்கள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.500 பரிசு


பிச்சைக்காரர்கள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.500 பரிசு
x
தினத்தந்தி 30 Dec 2017 11:30 PM GMT (Updated: 2017-12-31T03:31:39+05:30)

பிச்சைக்காரர்கள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.500 பரிசு தெலுங்கானா அரசு அறிவிப்பு.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநில சிறைத்துறை, ஐதராபாத் நகரில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டத்தை தொடங்கி இருக்கிறது. அதன்படி அவர்களுக்கு தங்கும் இடம், உணவு வழங்குவதோடு வேலைவாய்ப்புக்கான பயிற்சியையும் அளித்து வருகிறது. ஐதராபாத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றி முடிவு செய்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், ஐதராபாத் நகரில் எந்த தெருவிலாவது பிச்சைக்காரர்கள் இருப்பது பற்றி தகவல் கொடுத்தால் ரூ.500 பரிசு வழங்கப்படும் என்று சிறைத்துறை டி.ஜி.பி. வி.கே.சிங் அறிவித்து உள்ளார்.

இதுவரை 741 ஆண் பிச்சைக்காரர்களும், 300 பெண் பிச்சைக்காரர்களும் அப்புறப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.


Next Story