காஷ்மீரில் துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை


காஷ்மீரில் துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை
x
தினத்தந்தி 31 Dec 2017 8:38 AM GMT (Updated: 2017-12-31T14:08:07+05:30)

ஜம்மு மற்றும் காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் பலியானார்கள்.#terrorist

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் ஒன்று அமைந்துள்ளது.  இங்கு இன்று அதிகாலை 2 மணியளவில் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களும் பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.  இந்த சம்பவத்தில் 3 வீரர்கள் துப்பாக்கி குண்டு காயம் அடைந்தனர்.  அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  வீரர்களின் பதிலடி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து மூத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல் துறை அதிகாரிகள் முகாமுக்கு சென்றுள்ளனர்.

Next Story