ரூ.2 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் மேற்கு வங்க வாலிபர் கைது


ரூ.2 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் மேற்கு வங்க வாலிபர் கைது
x
தினத்தந்தி 31 Dec 2017 4:25 PM GMT (Updated: 2017-12-31T21:55:29+05:30)

தானேயில் ரூ.2 லட்சம் கள்ள நோட்டுகள் கடத்த முயன்ற மேற்கு வங்க வாலிபரை போலீசார் கைது செய்தனர். #West Bengal #money

மும்பை, 

மராட்டிய மாநிலம் தானேயில் உள்ள சிட்கோ பஸ் நிறுத்தத்தில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருப்பதாக சம்பவத்தன்று மாலை தானே போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த குறிப்பிட்ட வாலிபரை பிடித்து, அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனையிட்டனர். அதில், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த பையில் 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் இருந்தன. அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.

மொத்தம் ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்துக்கான கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த நோட்டுகளை பறிமுதல் செய்து, அதிரடியாக அந்த வாலிபரை கைது செய்தனர்.

விசாரணையில், அவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த முகமது பாபர் சிராஜூல் அலி (வயது26) என்பதும், மும்பை வடலாவில் வசித்து வருவதும் தெரியவந்தது.

அவர் மீது தானே நகர போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story