மும்பையின் மரோல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 பேர் பலி


மும்பையின் மரோல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 பேர் பலி
x
தினத்தந்தி 4 Jan 2018 1:46 AM GMT (Updated: 4 Jan 2018 1:53 AM GMT)

மும்பையின் மரோல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #mumbai #fireaccident

மும்பை,

மும்பையின் மரோல் பகுதியில் உள்ள மைமூன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று பின்னிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர். 

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள்  மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #mumbai #fireaccident


Next Story