தேசிய செய்திகள்

இங்கிருக்க வேண்டியது ஏன்? கடற்படை அதிகாரிகளுக்கு மும்பையில் இடம் கிடையாது - நிதின் கட்காரி காட்டம் + "||" + Why Do Navy Officials Need to Stay in South Mumbai Won t Give an Inch of Land Gadkari

இங்கிருக்க வேண்டியது ஏன்? கடற்படை அதிகாரிகளுக்கு மும்பையில் இடம் கிடையாது - நிதின் கட்காரி காட்டம்

இங்கிருக்க வேண்டியது ஏன்? கடற்படை அதிகாரிகளுக்கு மும்பையில் இடம் கிடையாது - நிதின் கட்காரி காட்டம்
தெற்கு மும்பையில் கடற்படை அதிகாரிகள் தங்கிருக்க வேண்டியது ஏன்? என மத்திய மந்திரி நிதின் கட்காரி கேள்வி எழுப்பிஉள்ளார். #Gadkari #Navy
மும்பை, 

மலபார் ஹில்ஸ் பகுதியில் மிதக்கும் ஹோட்டல் மற்றும் கடல்விமான சேவைதளம் ஆகியவை அடங்கிய புதிய திட்டத்தை முன்னெடுக்க இந்திய கடற்படை கோரிய அனுமதியை மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி நிராகரித்து உள்ளார், பொது வெளியில் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து உள்ளார். ஏன் அனைத்து கடற்படை அதிகாரிகளும் தெற்கு மும்பையில் தங்கியிருக்க வேண்டும் என்பது ஆச்சரியம் அளிக்கிறது, இப்பகுதியில் பிளாட்கள் மற்றும் குடியிருப்புகள் அமைக்க ஒரு இஞ்ச் அளவுக்கூட இடம் கொடுக்கப்படாது என கூறிஉள்ளார். 

 “பொதுவாக பயங்கரவாதிகள் ஊடுருவும் எல்லைப் பகுதியில்தான் கடற்படை இருக்கவேண்டியது அவசியம். ஆனால் அனைவரும் (கடற்படையில் உள்ள அதிகாரிகள்) தெற்கு மும்பையிலே குடியிருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்? அவர்கள் என்னிடம் வந்தார்கள், பிளாட் வேண்டும் என்று கேட்டார்கள். அவர்களுக்கு ஒரு இஞ்ச் இடம் கூட கொடுக்க மாட்டேன். என்னிடம் மீண்டும் வராதீர்கள்,” என கட்காரி பேசிஉள்ளார். 

இந்தியாவின் மேற்கு பிராந்திய கடற்படை கமாண்டர் துணை அட்மிரல் கிரிஷ் லுத்ரா பங்குபெற்ற பொது நிகழ்ச்சியில் கட்காரி பேசிஉள்ளார். 

“தெற்கு மும்பையில் பிராதான இடத்தில் அனைவரும் பிளாட்கள் மற்றும் குடியிருப்புகளை அமைக்க வேண்டும் என விரும்புகிறார்கள். நாங்கள் உங்களுக்கு (கடற்படைக்கு) மதிப்பளிக்கிறோம், ஆனால் நீங்கள் பாகிஸ்தான் எல்லைக்கு செல்ல வேண்டும் அங்குதான் ரோந்து மேற்கொள்ள வேண்டும்,” என பேசிஉள்ளார் கட்காரி. மராட்டிய மாநில கவர்னர், மற்றும் முதல்-மந்திரி உள்ளிட்ட அதிகாரிகள் அதிகாரிகள் அதிகமாக வசிக்கும் பகுதியில் கடற்படையும் இடம் ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்த விவகாரத்தில் ‘இப்பகுதியில் கடற்படைக்கு எந்தஒரு பணியும் கிடையாது’ என கூறி தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்தி உள்ளார் நிதின் கட்காரி. 

நாங்கள்தான் அரசு, கடற்படை அல்லது பாதுகாப்பு அமைச்சகம் அரசு கிடையாது எனவும் நிதின் கட்காரி பேசிஉள்ளார்.

நிதின் கட்காரி பொது இடத்தில் இவ்வாறு பேசியது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது, நிதின் கட்காரியின் பேச்சை விமர்சித்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.