தேசிய செய்திகள்

உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியாக இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூட்டாக பரபரப்பு பேட்டி + "||" + Four senior judges of SC Collegium speak out against CJI Dipak Misra

உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியாக இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூட்டாக பரபரப்பு பேட்டி

உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியாக இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூட்டாக பரபரப்பு பேட்டி
உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியாக இல்லை; எங்கள் கவலைகளை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க விரும்பினோம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூட்டாக பேட்டி அளித்தனர். #SupremeCourt #Judges
புதுடெல்லி

உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் முதன்முறையாக  இன்று நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.

பத்திரிக்கையாளர்களை சந்தித்த நீதிபதி செல்லமேஸ்வர், நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலிஜியம் முறையை கடுமையாக எதிர்த்து வருபவர்.  

நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதையொட்டி உச்சநீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் வழக்கு விசாரணையை முடித்து கொண்டுள்ளன.

நீதிபதிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது . இப்படியே போனால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது.

சில மாதங்களுக்கு முன்பு முக்கிய விவகாரம் ஒன்றில் 4 நீதிபதிகள்  கையெழுத்திட்டு கடிதம் அளித்தோம். உச்சநீதிமன்றத்தை பாதுகாக்க தலைமை நீதிபதிக்கு கொண்டு சென்ற சில விவகாரங்கள், நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது. சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன.  நீதித்துறைக்கு எங்களைபோன்ற மூத்த நீதிபதிகளே பொறுப்பானவர்கள் என்பது எங்கள் கருத்து. 

நாங்கள் கொடுத்த  கடிதத்தின் பிரதிகளை ஊடகங்களுக்கு கொடுக்கிறோம். அந்த கடிதத்தில் அனைத்து விவரங்களும் உள்ளன.  எங்களுக்காக மட்டுமே நாங்கள் இப்போது பேசினோம் என உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் கூறினார்.

உச்சநீதிமன்றத்தை பாதுகாப்பது குறித்து நாட்டு மக்களே முடிவு செய்ய வேண்டும் என  நீதிபதி ரஞ்சன் கோகாய்  கூறினார். 

#Chelameswar #SupremeCourt #pressmeet