தேசிய செய்திகள்

உச்சநீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பால் பங்கு சந்தை சரிவு + "||" + Markets Fall 256 Points After Four Supreme Court Judges Address the Media for the First Time Ever

உச்சநீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பால் பங்கு சந்தை சரிவு

உச்சநீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பால் பங்கு சந்தை சரிவு
உச்சநீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பால் பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. #sensex #SupremeCourt
மும்பை

வரலாற்றில் முதன்முறையாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகியோர் இன்று டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பகீர் புகார் கூறினர். அவர் முடிவுகளை  தன்னிச்சையாகவே எடுக்கிறார் என்றும் மற்ற மூத்த நீதிபதிகளை கலந்து ஆலோசிப்பதில்லை என்றும் புகார் கூறினர்.

மேலும் கூறும்போது, இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது . இப்படியே போனால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது. உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியாக செயல்படவில்லை. இங்கு கடந்த சில மாதங்களாக நடக்கும் நிகழ்வுகள் ஏற்புடையதாக இல்லை. உச்சநீதிமன்றத்தை பாதுகாக்க நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது. எங்களது கவலைகளை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கவே பத்திரிகையாளர்களை சந்தித்தோம். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வது பற்றி நாட்டு மக்கள் தான் சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

நீதிபதிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பால், ஸ்திரத்தன்மை மீது  முதலீட்டாளர்களுக்கு ஐயம் எழுந்தது. எனவே, தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தையில் பங்குகள் சரிந்தன.

இன்று நண்பகல் 12.15 மணி நிலவரப்படி, மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் 34550.2 என்ற அளவுக்கு சரிந்தது. பிரஸ் மீட் ஆரம்பித்ததும் இந்த நிலையில் இருந்த பங்கு சந்தை, பிரஸ் மீட் முடியும்போது மதியம் சுமார் 12.35 மணிக்கு 34423.8 என்ற அளவுக்கு மேலும் சரிந்தது.

ஆக மொத்தம், மும்பை பங்கு சந்தை அரை மணி நேரத்தில் 183 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. 12.45 மணிக்கு பங்கு புள்ளிகள் மேலும் சரிவடைந்து 34349.99 என்ள அளவுக்கு சென்றது. பிரஸ் மீட்டுக்கு முந்தைய நிலையை ஒப்பிட்டால், இது 256 புள்ளிகள் சரிவாகும்.

#stockmarket  #SupremeCourt  #‪DipakMisra‬