தேசிய செய்திகள்

ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து பற்றி டுவிட்டரில் காங்கிரஸ் கருத்து + "||" + Democracy in danger: Cong on press conference by 4 SC judges

ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து பற்றி டுவிட்டரில் காங்கிரஸ் கருத்து

ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது:  சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து பற்றி டுவிட்டரில் காங்கிரஸ் கருத்து
சுப்ரீம் கோர்ட்டின் நிர்வாகம் சரியாக இல்லை என உச்ச நீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் வெளிப்படையாக கூறிய நிலையில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என காங்கிரஸ் இன்று கூறியுள்ளது.#SupremeCourt #INC
புதுடெல்லி,

உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் முதன்முறையாக  இன்று நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.

பத்திரிக்கையாளர்களை சந்தித்த நீதிபதி செல்லமேஸ்வர், நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலிஜியம் முறையை கடுமையாக எதிர்த்து வருபவர்.  

இந்த சந்திப்பில், சுப்ரீம் கோர்ட்டின் நிர்வாகம் சரியாக இல்லை என்று அவர்கள் கூறினர்.  சுப்ரீம் கோர்ட்டு பாதுகாக்கப்படவில்லை எனில், நாட்டில் ஜனநாயகம் பிழைக்காது என்றும் நீதிபதிகள் கூறினர்.

சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட்டின் சூழ்நிலை பற்றி கூறியுள்ளது நாட்டில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், சுப்ரீம் கோர்ட்டின் நிர்வாகம் பற்றி 4 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்துகளை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.  ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என தெரிவித்துள்ளது.


 #SupremeCourt  #‪DipakMisra‬  #INC