தேசிய செய்திகள்

ஹஜ் மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தது; இதுவரை இல்லாத வகையில் 1.75 லட்சம் பேர் விண்ணப்பம் + "||" + Subsidy on Haj over from this year Minority Affairs Minister Mukhtar Abbas Naqvi

ஹஜ் மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தது; இதுவரை இல்லாத வகையில் 1.75 லட்சம் பேர் விண்ணப்பம்

ஹஜ் மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தது; இதுவரை இல்லாத வகையில் 1.75 லட்சம் பேர் விண்ணப்பம்
ஹஜ் புனித பயணத்திற்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதுவரை இல்லாத வகையில் 1.75 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர். #HajSubsidy #Naqvi

புதுடெல்லி,


 உலகமெங்கும் இருந்து இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்கிறார்கள். இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் புனிதப்பயணம் செல்வோரின் எண்ணிக்கை  1.75 லட்சமாக உயர்ந்து உள்ளது. சுதந்திரத்துக்கு பின்னர் இவ்வளவு பேர் இந்தியாவில் இருந்து ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். கடந்த 2012–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு, புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அளிக்கும் மானியத்தை 2022–ம் ஆண்டுக்குள் படிப்படியாக குறைக்கவேண்டும் என உத்தரவிட்டது. 

இதைத் தொடர்ந்து ஹஜ் பயணம் மேற்கொள்வது பற்றி புதிய கொள்கையை உருவாக்க குழுவை அமைத்தது.

 இப்போது மத்திய அரசு ஹஜ் புனித பயணத்திற்கு வழங்கிய மானியத்தை ரத்து செய்தது. ரத்து செய்யப்பட்ட மானியத் தொகையானது பெண் குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஹஜ் பயணம் மேற்கொள்வது பற்றி மத்திய குழு வழங்கிய வரைவு பரிந்துரை கொள்கையின் முக்கிய அம்சமாக ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு கப்பல் வழி பயணமும் பரிந்துரைக்கப்பட்டது.

 கப்பல் வழியாக ஹஜ் புனித பயணம் தொடர்பாக சவுதி அரேபியா அரசுடன் இந்திய அரசு உடன்படிக்கை செய்து உள்ளது.