ஹஜ் மானியம் ரத்து நிதியை சிறுபான்மையினர் மேம்பாட்டிற்கு அரசு பயன்படுத்தும் என நம்புகிறோம் காங்கிரஸ்


ஹஜ் மானியம் ரத்து நிதியை சிறுபான்மையினர் மேம்பாட்டிற்கு அரசு பயன்படுத்தும் என நம்புகிறோம் காங்கிரஸ்
x
தினத்தந்தி 16 Jan 2018 2:46 PM GMT (Updated: 16 Jan 2018 2:46 PM GMT)

ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டதில் கருத்து தெரிவித்த காங்கிரஸ், நிதி சிறுபான்மையினர் மேம்பாட்டிற்கு அரசு பயன்படுத்தும் என நம்புகிறோம் என தெரிவித்து உள்ளது. #HajSubsidy #Congress



புதுடெல்லி,


மத்திய அரசு ஹஜ் புனித பயணத்திற்கு வழங்கிய மானியத்தை ரத்து செய்தது. ரத்து செய்யப்பட்ட மானியத் தொகையானது பெண் குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2012–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு, புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அளிக்கும் மானியத்தை 2022–ம் ஆண்டுக்குள் படிப்படியாக குறைக்கவேண்டும் என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஹஜ் பயணம் மேற்கொள்வது பற்றி புதிய கொள்கையை உருவாக்க மத்திய அரசு குழுவை அமைத்தது. குழுவின் பரிந்துரையின் படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. 

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்கையில், ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டதில் கிடைக்கும் நிதி சிறுபான்மையினர் மேம்பாட்டிற்கு அரசு பயன்படுத்தும் என நம்புகிறோம் என தெரிவித்து உள்ளது.

“நீதிபதி ஜே அப்தாப் ஆலம் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் 10 வருடங்களுக்கு ஹஜ் பயணத்திற்கு வழங்கும் நிதியை நிறுத்த வேண்டும், நிதியை சிறுபான்மையினர் கல்வி மற்றும் மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. மோடி அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு மதிப்பளிக்கும், சிறுபான்மை பிரிவை சேர்ந்த பெண்கள் குழந்தைகள் உள்பட சிறார்களுக்கு நவீன கல்வி மற்றும் மேம்பாட்டிற்கு நிதியை பயன்படுத்தும் என மிகவும் நம்புகிறோம், ” என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். 

Next Story