தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வர முயற்சி: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் + "||" + Trying to bring petrol, diesel under GST: Dharmendra Pradhan

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வர முயற்சி: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வர முயற்சி: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வர முயற்சி நடைபெற்று வருவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். #GST | #petrolprice
புதுடெல்லி,

பெட்ரோல், டீசலை சரக்கு மற்றும் சேவை வரி மசோதா வரம்புக்குள் கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருவதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:- சர்வதேச அளவில் கச்சா  எண்ணெய் விலை  அதிகரித்து வருவதுதான் இந்தியாவில் பெட்ரோல், டீசல்  விலை உயர்ந்ததற்கு காரணம். 

பெட்ரோல், டீசல் மண்ணெண்ணெய் ஆகியவற்றை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி கவுன்சில் இதற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று நம்புகிறோம். அதே நேரத்தில் மாநில அரசுகளும் பெட்ரோலிய பொருள்களுக்கு விதிக்கும் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.  #GST | #petrolprice