தேசிய செய்திகள்

50 ஆயிரம் ரூபாய்க்கு மூக்கு கண்ணாடி வாங்கிய கேரள சபாநாயகர் + "||" + After minister Shylaja Kerala speaker in the eye of a specs storm

50 ஆயிரம் ரூபாய்க்கு மூக்கு கண்ணாடி வாங்கிய கேரள சபாநாயகர்

50 ஆயிரம் ரூபாய்க்கு மூக்கு கண்ணாடி வாங்கிய கேரள சபாநாயகர்
50 ஆயிரம் ரூபாய்க்கு மூக்கு கண்ணாடி வாங்கிய கேரள சபாநாயகர் அதற்கான பில்லை அரசு கருவூலத்திற்கு அனுப்பி பணத்தை பெற்று கொண்டார்.
திருவனந்தபுரம்

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த பிடி பினு என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு சட்டசபை செயலர் அளித்த பதிலில், சபாநாயகர் 4,900 ரூபாய்க்கு மூக்கு கண்ணாடி பிரேம், 45 ஆயிரம் ரூபாய்க்கு கண்ணாடி லென்சுகளை வாங்கியுள்ளதாகவும், அதற்கான செலவை, அரசு கருவூலத்திலிருந்து பெற்று கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 2016 அக்டோபர் 5 முதல், 2017 ஜனவரி 19 வரை மருத்துவ சிகிச்சைக்காக 4.25 லட்ச ரூபாயை அரசிடம் பெற்று கொண்டுள்ளார். மாநில அரசு நிதி நெருக்கடியில் உள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த தகவல் அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 இது தொடர்பாக சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன்  டாக்டர்கள் ஆலோசனை படி தான் தான் மூக்கு கண்ணாடி வாங்கியதாக தெரிவித்துள்ளார்.