நில அபகரிப்பு வழக்கில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங்கிற்கு எதிராக வழக்குப்பதிவு


நில அபகரிப்பு வழக்கில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங்கிற்கு எதிராக வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 8 Feb 2018 9:03 AM GMT (Updated: 8 Feb 2018 9:03 AM GMT)

நில அபகரிப்பு வழக்கில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங்கிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பாட்னா,

பீகார் மாநிலம் நாவடா தொகுதி எம்.பி. மத்திய மந்திரி கிரிராஜ் சிங்கிற்கு எதிராக நில அபகரிப்பு வழக்கில் தானாபூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

அசோபூர் கிராமத்தை சேர்ந்த ராம் நாராயண் பிரசாத் தன்னுடைய நிலத்தை வலுக்கட்டாயமாக விற்பனை செய்ய செய்து, அதனை வாங்கியது தொடர்பாக சதிதிட்டத்தில் ஈடுபட்டதாக 33 பேருக்கு எதிராகவும் எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரித்த பாட்னா கோர்ட்டு உத்தரவின் பெயரில் தானாபூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இரண்டு ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக மத்திய மந்திரி கிரிராஜ் சிங் மற்றும் 32 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என போலீஸ் அதிகாரி சந்தீப் குமார் கூறி உள்ளார். 

நில அபகரிப்பு குற்றச்சாட்டை அடுத்து கிரிராஜ் சிங்கிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி வலியுறுத்தி உள்ளது.

“பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்-மந்திரி சுஷில் குமார் மோடி கிரிராஜ் சிங்கை ராஜினாமா செய்ய வலியுறுத்த வேண்டும். நரேந்திர மோடியின் அமைச்சரவையில் கிரிராஜ் சிங் பங்கு பெற்ற பின்னர்தான் அவருடைய வீட்டில் இருந்து கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது,” என பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவரும் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜாஸ்வி யாதவ் வலியுறுத்தி உள்ளார். 

 “இப்போது நிதிஷ் குமார் பாரதீய ஜனதா உடனான கூட்டணியை முறித்துவிடுவாரா? அல்லது தன்னுடைய மனசாட்சியின் படி பதவியை ராஜினாமா செய்து விடுவாரா? என கேள்வியை எழுப்பி உள்ள தேஜாஸ்வி யாதவ், இந்த தேசத்தின் மிகப்பெரிய வதந்தி ‘மாஸ்டர்’ சுஷில் மோடி, கிரிராஜ் சிங் அமைதியாக இருப்பது ஏன் எனவும் கேள்வியை எழுப்பி உள்ளார். 


Next Story