மத்திய பட்ஜெட்டை எதிர்த்து ஆந்திராவில் இடதுசாரிகள் கடையடைப்பு போராட்டம்


மத்திய பட்ஜெட்டை எதிர்த்து ஆந்திராவில் இடதுசாரிகள் கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2018 9:48 AM GMT (Updated: 8 Feb 2018 9:48 AM GMT)

மத்திய பட்ஜெட்டை எதிர்த்து ஆந்திராவில் இன்று இடதுசாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #unionbudget #tamilnews

அமராவதி 

சமீபத்தில் போடப்பட்ட  மத்திய பட்ஜெட்டில்  ஆந்திர அரசுக்கு சிறப்பு நிதி எதுவும் ஒதுக்கவில்லை என்று கோரியும்,  அநீதி இழைக்கப்படுவதாகவும்  எதிர்ப்பு தெரிவித்து இடது சாரி கட்சிகள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து ஆந்திராவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. 
            
இந்திய கம்யூனிட்ஸ் , இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல சிறிய கட்சிகளுக்கும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு  விடுத்துள்ளன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகியவை இந்த போராட்டத்திற்கு  ஆதரவு அளித்துள்ளன.
                   
இதை தொடர்ந்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு, கர்நாடக மாநிலப் பேருந்துகளும் ஆந்திர மாநிலத்துக்கு இயக்கப்படவில்லை. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காகத் திருப்பதியில் இருந்து திருமலைக்கு வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
 
மாவட்ட அதிகாரிகள் பொது சொத்துகளை பாதுகாப்பதற்கான  முன்னெச்சரிக்கை  நடவடிக்கை எடுக்கவும், அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை கண்காணிப்பாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை மண்டல அதிகாரி  மலகொண்டியா தெரிவித்துள்ளார். மேலும் முக்கிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புப் படைகள் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார். 

மாநில எம்.பி.கள்  புதன்கிழமை  பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர். முன்னதாக கட்சி எம்.பி க்களை மத்திய அமைச்சரவையில் இருந்து அறிவிப்பு வரும் வரை பாராளுமன்றத்தில்  போரட்டத்தைத் தொடர வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயு கேட்டுக்கொண்டார்.


Next Story