தேசிய செய்திகள்

ராகுல் காந்தி எனக்கும் ‘பாஸ்’தான், பா.ஜனதாவை தோற்கடிக்க பணியாற்ற வேண்டும் - சோனியா காந்தி + "||" + Rahul my boss too, will work with like minded parties to defeat BJP Sonia

ராகுல் காந்தி எனக்கும் ‘பாஸ்’தான், பா.ஜனதாவை தோற்கடிக்க பணியாற்ற வேண்டும் - சோனியா காந்தி

ராகுல் காந்தி எனக்கும் ‘பாஸ்’தான், பா.ஜனதாவை தோற்கடிக்க பணியாற்ற வேண்டும் - சோனியா காந்தி
ராகுல் காந்தி எனக்கும் ‘பாஸ்’தான், பாரதீய ஜனதாவை தோற்கடிக்க ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பணியாற்ற வேண்டும் என சோனியா காந்தி பேசிஉள்ளார்.

புதுடெல்லி,

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசினார். பிரதமர் மோடி அரசு மற்றும் பாரதீய ஜனதாவின் அனைத்து தரப்பு தாக்குதலையும் காங்கிரஸ் முன்னெடுத்தது. குறுகிய அரசியல் வளர்ச்சிக்காக பலதரப்பு மக்கள் வாழும் சமூதாயத்தில் மைனார்டி மக்களுக்கு எதிராக வன்முறைக்கு திட்டமிடுகிறது. விரைவில் தேர்தலை சந்திக்க உள்ள கர்நாடகாவிலும் இது காணப்படும் என சோனியா காந்தி குறிப்பிட்டார்.

 கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில் “நாம் ஒன்றாக இணைந்து புதிய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்து உள்ளோம். அவருக்கு (ராகுல் காந்தி) வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அவர் எனக்கும் தலைவர்தான். அதில் எந்தஒரு மாற்றமும் கிடையாது. என்னுடன் பணியாற்றிய போது கொண்டிருந்த அர்ப்பணிப்பு, விசுவாசம் மற்றும் உற்சாகத்துடன் இப்போது புதிய தலைவருடன் பணியாற்றுவீர்கள் என்பது எனக்கு தெரியும். காங்கிரஸ் கட்சியின் வருங்காலத்திற்காக நாம் அனைவரும் தலைவருடன் இணைந்து பணியாற்றோம் என எனக்கு நம்பிக்கை உள்ளது. அதற்கான பணியானது தொடங்கிவிட்டது.” என்றார். 

காங்கிரஸ் எம்.பிக்கள் தங்கள் தொகுதிகள் மட்டுமின்றி மற்ற பகுதிகளில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பாரதீய ஜனதா கட்சியை தோற்கடிக்க ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளையும் அரவணைத்து பணியாற்ற வேண்டும் என்றார் சோனியா காந்தி. இந்தியாவில் ஜனநாயகம், ஒற்றுமை, மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும், பொருளாதாரத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் சோனியா காந்தி பேசினார். குறுகிய அரசியல் வளர்ச்சிக்காக பலதரப்பு மக்கள் வாழும் சமூதாயத்தில் மைனார்டி மக்களுக்கு எதிராக வன்முறைக்கு திட்டமிடுகிறது. உத்தரபிரதேசம், குஜராத்தில் பார்த்தது போன்று விரைவில் தேர்தலை சந்திக்க உள்ள கர்நாடகாவிலும் காணப்படும் என சோனியா காந்தி குறிப்பிட்டார்.