ஒடிசாவில் அக்னி- 2 ஏவுகணையின் சோதனை வெற்றி


ஒடிசாவில்  அக்னி- 2 ஏவுகணையின் சோதனை  வெற்றி
x
தினத்தந்தி 20 Feb 2018 8:04 AM GMT (Updated: 20 Feb 2018 8:04 AM GMT)

ஒடிசா மாநிலத்தில் கடலோரமாக அமைந்துள்ள உள்ள அப்துல்கலாம் தீவிலிருந்து அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் நடுத்தர ரக அக்னி 2 ஏவுகணையின் சோதனை நடந்தது. #Agnimissile #IRBM

புவனேசுவரம்,

அப்துல்கலாம்   கடற்கரையில் இருந்து சுமார் 8.40 மணியளவில்   இருந்து அக்னி -2 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனையை செய்யப்பட்டது.   இந்தியா ராணுவம். அனைத்து வசதிகளும் மற்றும் வழிகாட்டும் கருவிகள் ஆகியவற்றுடன் முழுமையாக பொருத்தப்பட்டு இலக்கை மிக துல்லியமாக  எட்டும் வகையில் ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணை (ஐஆர்பிஎம்) அக்னி -2 சோதனை நடத்தப்பட்டது.

 மேலும்,  2000 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்குகளை தாக்கும் திறன் பெற்றது.  இது இராணுவத்தின் மூலோபாய படைகளின் கட்டளை (SFC) மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த ஏவுகணை கடந்த ஒரு மாதத்தில் 3-வது சோதனையாகும் மேலும் இந்த சோதனையிலும்  வெற்றியை கண்டுள்ளது  குறிப்பிடதக்கது. 

இது குறித்து  விஞ்ஞானிகள் கூறுகையில்,

“ 20 மீட்டர் நீளமும்,17 டன் எடை உடைய அக்னி 2 ஏவுகணை 1000 கிலோ எடைகளை சுமந்து சென்று  2000 கி.மீ தூரம்  சென்று இலக்குகளை தாக்கும் திறனுடையது. அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் நடுத்தர ரக அக்னி 2 ஏவுகணையின் சோதனை வெற்றியை கண்டுள்ளது . இது ராணுவத்திற்கு மிகவும்  பயனுள்ளதாக இருக்கும் .”  என கூறினா்.


Next Story