தேசிய செய்திகள்

ஆண் வாரிசு தான் வேண்டுமென பெற்ற மகளை கொலை செய்த தந்தை + "||" + The male heir only needs Father who killed her daughter

ஆண் வாரிசு தான் வேண்டுமென பெற்ற மகளை கொலை செய்த தந்தை

ஆண் வாரிசு தான் வேண்டுமென பெற்ற மகளை கொலை செய்த தந்தை
தனக்கு பிறந்த ஒரு மாத பெண் குழந்தையை தந்தையே தன் குடும்பத்தாருடன் கொலை செய்த கொடூர சம்பவம் உத்திரபிரதேச மாநிலம் பல்ராம்பூரில் நடைபெற்றுள்ளது.
பல்ராம்பூர்,

ஆண் வாரிசு தான் வேண்டுமென்று தனக்கு பிறந்த ஒரு மாத பெண் குழந்தையை தந்தையே தன் குடும்பத்தாருடன் கொலை செய்த கொடூர சம்பவம் உத்திரபிரதேச மாநிலம் பல்ராம்பூரில் நடைபெற்றுள்ளது.

இது குறித்து துணை போலீஸ் கண்காணிப்பாளர் கூறுகையில்,”மூன்று வருடங்களுக்கு முன்னர் ராஜேஷ் சாவ்கான், சங்கீதா என்பவரை மணந்துள்ளார்.இதனிடையே தனக்கு ஆண் வாரிசு தான் வேண்டுமென ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்த வேளையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கடும் கோபமுற்ற ராஜேஷ் தனது மனைவி சங்கீதாவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.


இந்நிலையில் வேலை காரணமாக வெளியே சென்றிருந்த சங்கீதா திரும்பி வருவதற்குள், ராஜேஷ் தனது குடும்பத்தாருடன் இணைந்து தான் பெற்ற பிள்ளை எனக்கூட பாராமல் கொன்றுள்ளான். வேலையை முடித்து வீட்டிற்கு வந்த சங்கீதா தன் குழந்தை இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியுற்று கூச்சலிட்டிருக்கிறார். இதனால் தன் மனைவியை அடித்து உதைத்த ராஜேஷ் சங்கீதாவை ஒரு அறையில் வைத்து பூட்டி குழந்தையை வீட்டிற்கு வெளியே புதைத்துள்ளான்.

இதனிடையே வீட்டிலிருந்து தப்பித்த சங்கீதா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ராஜேஷ் மற்றும் அவனது குடும்பத்தார் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.