சிங்கம் அடைக்கப்பட்ட பகுதிக்குள் குதித்த வாலிபர்


சிங்கம் அடைக்கப்பட்ட பகுதிக்குள் குதித்த வாலிபர்
x
தினத்தந்தி 21 Feb 2018 11:00 PM GMT (Updated: 21 Feb 2018 9:00 PM GMT)

உயிரியல் பூங்காவில் சிங்கம் அடைக்கப்பட்ட பகுதிக்குள் குதித்த வாலிபர் உயிருடன் மீட்கப்பட்டார்.

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரத்தில் உள்ள உயிரியல் பூங்காவை நேற்று ஏராளமான பார்வையாளர்கள் பார்வையிட்டு கொண்டிருந்தனர். அப்போது சிங்கம் அடைக்கப்பட்ட வேலியில் திடீரென ஒரு வாலிபர் ஏறி குதித்தார். அவரை நோக்கி ஒரு பெண் சிங்கம் ஓடி வந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற பார்வையாளர்கள் கூச்சலிட்டனர். உடனே அங்கிருந்த பூங்கா ஊழியர்கள் ஓடி வந்து சிங்கத்தின் கவனத்தை திசைதிருப்பி அந்த வாலிபரை உயிருடன் மீட்டனர்.

இதையடுத்து அந்த வாலிபரை போலீசாரிடம் பூங்கா ஊழியர்கள் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் ஒட்டபாலம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 33) என தெரியவந்தது.

முருகனை காணவில்லை என அவருடைய பெற்றோர் சில நாட்களுக்கு முன்பு போலீசில் புகார் அளித்து இருந்தனர். இதனால் அவர் எதற்காக வீட்டை விட்டு வெளியேறினார்? சிங்கம் அடைக்கப்பட்ட வேலியில் ஏன் குதித்தார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story