தேசிய செய்திகள்

இரவு உணவு விருந்தில் பங்கேற்க காலிஸ்தான் பயங்கரவாதிக்கு விடுத்த அழைப்பை ரத்து செய்தார் கனடா தூதர் + "||" + Canada High Commission cancels dinner invite to Khalistan terrorist

இரவு உணவு விருந்தில் பங்கேற்க காலிஸ்தான் பயங்கரவாதிக்கு விடுத்த அழைப்பை ரத்து செய்தார் கனடா தூதர்

இரவு உணவு விருந்தில் பங்கேற்க காலிஸ்தான் பயங்கரவாதிக்கு விடுத்த அழைப்பை ரத்து செய்தார் கனடா தூதர்
டெல்லியில் இன்று கனடா பிரதமர் ட்ரூடோ சார்பில் நடத்தப்படும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க ஜஸ்பால் அத்வாலுக்கு விடுத்த அழைப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. #Tamilnews
புதுடெல்லி,

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 17-ம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பஞ்சாப் மாநிலத்துக்கு  சென்றார். அப்போது, அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலுக்கு தமது குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்தித்து ஜஸ்டின் ட்ரூடோ ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், இன்று இரவு தலைநகர் டெல்லியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவருடன் வந்துள்ள அதிகாரிகள் குழுவுக்கு, இந்தியாவுக்கான கனடா தூதர், இரவு உணவு விருந்து  கொடுக்கிறார். இந்த விருந்து டெல்லியில் உள்ள கனடா தூதரகத்தில் நடைபெறுகிறது. 

இதில் கலந்து கொள்ள காலிஸ்தான் இயக்க பயங்கரவாதியான ஜஸ்பால் அத்வாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில், அத்வாலுக்கு விடுத்த அழைப்பை கனடா தூதர் ரத்து செய்துள்ளார். கனடா பிரதமரின் காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு, பஞ்சாப் முதல் மந்திரி அமரிந்தர் சிங் உள்ளிட்ட பலரால் விமர்சிக்கப்பட்ட நிலையில், அத்வாலுக்கு விடுத்த அழைப்பு ரத்து செய்யப்பட்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

1986 ஆம் ஆண்டு அப்போதைய  பஞ்சாப் மந்திரி மல்கைத் சிங்  சித்துவை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் அத்வால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி, குற்றவாளி என அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஜஸ்பால் அத்வாலுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்து குறிப்பிடத்தக்கது.