திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ‘‘பக்தர்களுக்கு இனி 10 லட்டுகள் வழங்கப்படும்’’


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ‘‘பக்தர்களுக்கு இனி 10 லட்டுகள் வழங்கப்படும்’’
x
தினத்தந்தி 24 Feb 2018 10:30 PM GMT (Updated: 24 Feb 2018 7:35 PM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தற்போது குறிப்பிட்ட அளவு மட்டுமே லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

நகரி,

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல் லட்டுகள் வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்து தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறியதாவது:–

திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவான 4 லட்டுகள் வழங்கப்படுகிறது. இதனை இடைத்தரகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கள்ளச்சந்தையில் கூடுதல் லட்டுகளை விற்று பக்தர்களிடம் அதிக பணம் வாங்கி வந்தனர். இந்த நிலையை தடுக்கும் நோக்கில் திருப்பதி கோவிலில் இனி பக்தர்களுக்கு தலா 10 லட்டுகள் வழங்கப்படும்.

இதனால் இடைத்தரகர்கள் கட்டுப்படுத்தப்படுவதுடன், பக்தர்களையும் திருப்திப்படுத்த முடியும். கோடை விடுமுறையில் தினமும் 3½ லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படும்.

மேலும், மின்சாரத்தை மிச்சப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக தெருக்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் ரூ.5 கோடி செலவில் 56 ஆயிரம் எ.இ.டி பல்புகள் பொருத்தப்பட்டது. அடுத்தகட்டமாக ரூ.1.2 கோடி செலவில் 13 ஆயிரம் எ.இ.டி. பல்புகள் பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story