பிரபல நடிகை ஸ்ரீதேவி காலமானார்


பிரபல நடிகை ஸ்ரீதேவி காலமானார்
x
தினத்தந்தி 24 Feb 2018 10:39 PM GMT (Updated: 25 Feb 2018 4:53 AM GMT)

பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார்.

துபாய்,

பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார்.  அவருக்கு வயது 54.

துபாயில் நடந்த திருமணவிழாவில் பங்கேற்க சென்ற போது மாரடைப்பால் உயிரிழந்தார். இதனை மைத்துனர் சஞ்சய் கபூர் உறுதி செய்துள்ளார்.

ரஜினி, கமல்  உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தவர். 4 வயதில் திரைக்கு வந்தவர். இந்தி , தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர்.

இவரது மறைவுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா, திரிஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story