48 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் செய்யாததை 48 மாதங்களில் நாங்கள் செய்துள்ளோம் பிரதமர் மோடி பேச்சு


48 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் செய்யாததை 48 மாதங்களில் நாங்கள் செய்துள்ளோம் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 25 Feb 2018 9:17 AM GMT (Updated: 25 Feb 2018 9:17 AM GMT)

48 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் செய்யாததை 48 மாதங்களில் நாங்கள் செய்துள்ளோம் என்று புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். #PMModi #Puducherry

புதுச்சேரி,

புதுவையை அடுத்து தமிழக பகுதியில் ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. வெளிநாட்டினர் அதிகம் வசித்து வரும் ஆரோவில் நகரம் உதயமாகி 50 ஆண்டுகள் ஆகிறது.

இங்கு 164 நாடுகளை சேர்ந்த 2,500க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆரோவில் நிர்வாகம் சார்பில் இந்த நகரத்தின் 50-வது ஆண்டு பொன்விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். 

உலகில் ஒட்டுமொத்த மக்களையும் இணைக்கும் பாலமாக ஆரோவில் திகழ்கிறது.  இந்த பொன்விழாவில் பங்கேற்றது எனக்கு பெரும் மகிழ்ச்சி. இந்திய மதங்கள் வேறுபடினும் ஆரோவில் ஒற்றுமை நிலவும் இடமாக திகழ்கிறது. ஆரோவில் கல்விக்காக செய்து வரும் பணி பாராட்டுதலுக்குரியது என்று மோடி பேசினார்.

அதன் பின்னர்  லாஸ்பேட்டை மைதானத்திற்கு வந்த பிரதமர் மோடி  பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

புதுச்சேரி சகோதர, சகோதரிகளே...

* நீண்ட நாட்களுக்கு பிறகு புதுச்சேரி வந்துள்ளேன், இது சித்தர்கள் வாழ்ந்த பூமி.

* மகாகவி பாரதியாரை வரவேற்று அவரை தேசிய கவியாக்கியது புதுச்சேரி.

* புதுச்சேரியில் ஆட்சியில் இருப்பவர்கள், மண்ணிற்கு அநியாயம் இழைத்திருக்கிறார்கள்.

* ’காஞ்சி’யையும் ’காசி’ யையும் தன் கவிதையின் மூலம் இணைத்தவர் மகாகவி பாரதியார்

* நாம் முன்னேறுவதில் அரசு செயல்படும் விதத்திலே என்ன குறை உள்ளது என்பதை சிந்திக்க வேண்டும். 

* 48 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் செய்யாததை 48 மாதங்களில் நாங்கள் செய்துள்ளோம்.

* புதுச்சேரியில் இளைஞர்கள் பெண்கள் முன்னேறுவதற்கான சூழல் நிலவுகிறதா? இங்கு ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறதா? புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கடந்த 10 ஆண்டுகளாக தடைகள் உள்ளன.

* ஜவுளித்துறையில் செழித்துக்கொண்டிருந்த புதுச்சேரி தன் மினுமினுப்பை இழந்துவிட்டது

* ஒரு குடும்பம், நேரடியாக அல்லது மறைமுகமாக 48 ஆண்டுகளாக இந்தியாவில் ஆட்சி செலுத்தியுள்ளது.

* டெல்லியில் இருந்து ஜனநாயகம் பேசும் காங்கிரஸ் தலைவர்களை கேட்கிறேன்.

* புதுச்சேரியில் பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பது ஏன்?

* நியமன எம்.எல்.ஏக்களை ஜனநாயக கடமை செய்ய விடாமல் தடுப்பது ஏன்?

* புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமியை தான் இனி முன் உதாரணமாக காங்கிரசார் காட்டுவார்கள்.

* ஏனெனில், இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் எங்குமே இருக்காது.

* நாம் முன்னேறுவதில் அரசு செயல்படும் விதத்திலே என்ன குறை உள்ளது என்பதை சிந்திக்க வேண்டும்

* 48 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் செய்யாததை 48 மாதங்களில் நாங்கள் செய்துள்ளோம்.

இவ்வாறு தொடர்ந்து பேசி வருகிறார்.

Next Story